கொழுபில் 18 மணி நேர நீர் வெட்டு
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (03) மு.ப. 8.00 மணி முதல் ஞாயிறு (04) அதிகாலை 2.00 மணி வரை கொழும்பு நகரம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, அறிவித்துள்ளது.
அம்பத்தல பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள், இரத்மலானை, கட்டுபெத்த பிரதேசங்களுக்கு குறித்த காலப் பகுதியில் நீர் விநியோகம் தடைப்படுமென சபை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் போதிய நீரை சேமித்து வைப்பதன் மூலம் நீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது