பிராந்தியம்
காத்தான்குடி “கிட்ஸ் மார்ட்” சிறுவர் சந்தை
காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலை பாலர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட “கிட்ஸ் மார்ட்” சிறுவர் சந்தை இன்று (03) மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று சந்தையினை திறந்து வைத்துள்ளதுடன், பயன் தரும் மரக்கன்றுகளை சிறார்களுக்கு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.