crossorigin="anonymous">
பிராந்தியம்

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய 68 வது பாதயாத்திரை இன்று (03) திகதி சனிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்காண அடியார்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் இந்த பாதை யாத்திரையானது மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற ஜெபவழிபாடுகளை தொடர்ந்து ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் விசேட செபவழிபாடுகளுடன் ஆரம்பமான பாதயாத்திரை அன்னையின் திருவுருவ பவனியுடன் வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலயம், வலையிறவுப் பாலம் ஊடாக அன்னையின் திருத்தலத்தை சென்றடைந்ததுடன், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்தும் காலை 5.15 மணி திருப்பலியின் பின்னர் பதுளை வீதி, கரடியனாறு வழியாக மற்றுமொரு பாதயாத்திரை அன்னையின் திருத்தலத்தினை வந்தடைந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ள விசேட கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்று நடைபெற்றுள்ளது.

இந்த புனித யாத்திரையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை, மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மறை மாவட்டத்தின் அனைத்து பங்குகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 4

Back to top button
error: