பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அறிவுபூர்வமான முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் சமகால சந்தை நிலைமைகள் தொடர்பாக அறிந்திருத்தல் அவசியமாகும்.
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டு முன்மொழிவுகள் பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகள் மீது எவ்வாறான தாக்கங்களை எதிர்காலங்களில் ஏற்படுத்தவுள்ளன என்பதனை அறிந்து அதற்கேற்றவாறு தமது முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்ளுதல் சாலச்சிறந்ததாகும்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு ‘இடைக்கால பாதீடும் பங்குச்சந்தையும்’ என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு ஒன்றினை எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 07.00 மணி தொடக்கம் பி.ப 08.00 மணி வரை நடத்த கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இணையவழிக் கருத்தரங்கில் பங்குபற்றி பயன் பெறுமாறு கொழும்பு பங்குப்பரிவர்த்தனை அழைப்பு விடுக்கின்றது
பதிவுகளுக்கு: https://bit.ly/3Ky1JIA