crossorigin="anonymous">
விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது.

15-ஆவது ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ,பாகிஸ்தான் அணியை இலங்கை அணி தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியது.

எட்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி ஆசிய T20 கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.இதன் மூலம் ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6 ஆவது முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

15-ஆவது ஆசிய கிரிக்கெட் கிண்ணத் தொடரின் ,இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) துபாயில் நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

171 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஒட்டங்களை பெற்று 23 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − 62 =

Back to top button
error: