crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

‘அரசு, சுகாதார, பாதுகாப்பு தரப்பினரின் உத்தரவுக்கு செவிமடுங்கள்’- அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதற்கு மேலதிகமாக அரசினதும், சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரினதும் உத்தரவுக்கு கீழ்படிந்து நடக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று (14) மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

இம்மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றிலிருந்து வேறுவகையான கொரோனா வைரசுகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் நிலைமையினை உனந்து செயற்படுமாறும் கேட்டுக் கொண்டார.

இது தவிர சுகாதாரத் துறையினர் தவிர்ந்த அனைத்து அத்தியவசிய திணைக்களங்களின் ஊழியர்கள் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப் பகுதியில் கடமைக்குச் செல்லும்போது தமது அலுவலக அடையாள அட்டைக்கு மேலதிகமாக திணைக்களத் தலைவரின் அனுமதிக் கடிதத்தினையும் வைத்திருக்கவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதவிடத்து பாதுகாப்புத் தரப்பினரால் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் இக்கூட்டத்தில் தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணக்கட்டுப்பாட்டினால் இம்மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 89 ஆயிரத்தி 836 வறிய குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவாக 44 கோடி 91 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கொரோனா சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு பொதுமக்களால் இதுவரை சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 16 = 21

Back to top button
error: