பொது
தாமரை கோபுர முதல்நாள் வருமானம் ரூ.15 இலட்சம்
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான தாமரைக் கோபுரம் இம்மாதம் 15 ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் நுழைவுச் சீட்டு விற்பனை ஊடாக ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதல்நாள் வருமானம் சுமார் 15 இலட்சத்தை அண்மித்துள்ளது என்று நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
அன்றைய தினம் சுமார் 2612 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளனர். அவர்களில் 21 வெளிநாட்டவர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.