crossorigin="anonymous">
பொது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் பயணம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நேற்று (17) ஐக்கியராச்சிய லண்டனை சென்றடைந்தார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  லண்டனை சென்றடைந்தார்.

லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை பொதுநலவாய, மேம்பாட்டு அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் மற்றும் இந்தியாவுக்கன பணிப்பாளர் பென் மெல்லர் (Ben Mellor), பிரித்தானிய இளவரசரின் விசேட பிரதிநி உப லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன் (Dave Easton) மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கை ஜனாதிபதி நாடு திரும்பும் வரை, தனக்கு கீழ் உள்ள அமைச்சுகளின் இராஜாங்க அமைச்சர்களை பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங் நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: