பிராந்தியம்
வீட்டுத்தோட்ட பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்திற்குபட்பட்ட வெல்லாவெளியில் அப்பகுதியைச் சேர்ந்த 100 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கு மிளகாய் மற்றும் கத்தரிக்கன்றுகளும், சோளம், பயற்றை, கீரை, வெண்டி, உள்ளிட்ட விதைகளும், வீட்டுத் தோட்டம் தொடர்பிலான கையேடுகளும் நேற்று (17) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் அமைந்துள்ள றே ஓவ் ஹோப் (RAY HOP PEOPLE LONDON) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நாமே நமக்கு (NAAME NAMAKKU C I C LONDON WALES) எனும் அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது அப்பகுதி பொதுசுகாதர பரிசோதகர் குபேரன், நமக்காக நாம் அமைப்பின் பிரதிநிதிகள், தொண்டர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும், இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.