கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகள் மீண்டும் ஆரம்பம்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் ஏற்பட்ட சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினி அமைப்பிலான செயலிழப்புக் கோளாறுகள் சீரமைக்கப்பட்டுள்ளது
சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றது.
கொன்சியூலர் விவகாரப் பிரிவின் ஏனைய அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் வழங்கப்படும். வருகை தரும் சேவை நாடுநர்கள் மேலதிக விவரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ள முடியும்:
· கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 01 0112338812 / 0112338843
· பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212215970
· பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262223182
· பிராந்திய அலுவலகம், கண்டி 0812384410
· பிராந்திய அலுவலகம், குருநாகல் 0372225941
· பிராந்திய அலுவலகம், மாத்தறை 0412226697