விளையாட்டு
அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களது கிரிக்கெட் போட்டி
கண்டி – அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களது “பிரதேச சபை உறுப்பினர் நட்புறவு அமைப்பினால்” நான்காவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு எட்டு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (10,11) நடைப்பெற்றது
இதன்போது வெற்றியீட்டிய அணிக்கு அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம், அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.ஆர்.எஸ்.கே, குணதிலக ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தனர்.