crossorigin="anonymous">
பிராந்தியம்

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக குணதிலக்க ராஜபக்ச

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமணம் செய்யப்பட்டுள்ள கண்டி மாவட்ட பொதுஜன பெறமுண பாராளுமன்ற உறுப்பினறும் பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் குணதிலக்க ராஜபக்ச கண்டி மாவட்ட செயலகத்தில் உள்ள புதிய கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உத்தியோகபூர்வ அலுவலகத்தை திறந்துவைத்து (16) அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், மாவட்ட மற்றும் மாகாண அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் வைத்து இம்மாதம் கடந்த 8 ஆம் திகதி கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 + = 12

Back to top button
error: