crossorigin="anonymous">
பொது

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக ரோஹினி கவிரத்ன

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (21) தெரிவுசெய்யப்பட்டார்.

இவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார்.

இதன் இணை உப தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே நியமிக்கப்பட்டதுடன், இவருடைய பெயரை கௌரக ரோஹினி கவிரத்ன முன்மொழிந்ததுடன், கௌரவ கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார். மற்றுமொரு இணை உபதலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வேலுகுமார் நியமிக்கப்பட்டார். இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கின்ஸ் நெல்சன் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஷோக அபேசிங்க வழிமொழிந்தார்.

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் (21) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடியபோதே இந்த நியமனங்கள் இடம்பெற்றன.

இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஒன்றியத்தின் செயலாளரும், பாராளுமன்றப் பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, இந்த ஒன்றியம் ஏழாவது பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டிருந்ததுடன், எட்டாவது பாராளுமன்றத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்டிருந்ததாகக் கூறினார்.

சிறுவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை மாற்றம் செய்வது அல்லது புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் சகல சிறுவர்களினதும் நல்வாழ்வு குறித்த கொள்கைகளை தொடர்ந்தும் மறு ஆய்வு செய்வது, சிறுவர்களுக்காகப் பணியாற்றும் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுவது மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்வது என்பன இந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாகும் எனப் பிரதிச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்துடன் இணைந்து தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அடுத்த கூட்ட தினத்தில் முன்வைக்க முடியும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஜே.சி. அலவத்துவல, கௌரவ கே.சுஜித் சஞ்சய் பெரேரா, கெளரவ ஹேஷா விதானகே, கௌரவ டபிள்யூ.எச்.எம்.தர்மசேன ஆகியோரும் கலந்து கொண்டதுடன், எதிர்வரும் 23ஆம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறவுள்ளது.

 

(பூஜாபிட்டிய தினகரன் நிருபர்)

மகாவலி உள்ளிட்ட பாரிய நீர்த்தேக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய மின் சக்தி தகடுகளை (சோலார் பேனல்கள்) நிறுவும் முதலீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்

கண்டியில் (23) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்

பாரிய நீர்த்தேக்கங்களை அடிப்படையாகக் கொண்ட பாரிய சோலார் பேனல்கள் பொருத்துவதன் முலம் அதிகளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது கடினமாக இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள துணை மின் நிலையங்கள் இந்த திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் மின் துணை மின் நிலைய அமைப்புகளின் விரிவாக்கமும் இதன் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மத ஸ்தலங்களுக்கான மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு மாற்றீடாக மத ஸ்தலங்களுக் சோலார் பேனல்ககளை பொறுத்தி சூரிய மின்கலங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மின்சார அமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 4

Back to top button
error: