பிராந்தியம்
மாத்தளை பிரதேச சபையின் நடமாடும் சேவை
மாத்தளை பிரதேச சபையினால் பிரதேச அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இன்று 24 ஆம் திகதி சனிக்கிழமை திக்கிரியா சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ளன
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவையில் மாத்தளை பிரதேச சபை, மாத்தளை பிரதேச செயலகம், பலபத்வல ஆயுர்வேத மையம், பலபத்வல பொது நூலகம், விவசாய சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மாத்தளை பொலிஸ் போன்ற பல அரச நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன