IMF நிறைவேற்றுக் குழுவி அனுமதி கிடைத்த பின்னர் அறிவிப்பதற்கு நடவடிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஏற்படுத்தப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்த அனுமதி கிடைத்ததன் பின்னர் உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாக சபாநாயகர் (22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
IMF உடன்படிக்கை குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம் தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்து சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சரவையும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை என்றும், அனைத்து தகவல்களும் கிடைத்த பின்னர் விரைவாக அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தனக்குத் தெரிவித்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
அதேபோன்று, இது தொடர்பில் எதிர்க்கட்சி உள்ளிட்ட உரிய அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாகவும் சபாநாயகர் அறிவித்தார்