சமூகப்பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் கருத்தரங்கு
(நதீர்சரீப்தீன்)
பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையினது ஏற்பாட்டில் கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை அன்று போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்பூட்டல் ஒருநாள் கருத்தரங்கொன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து “ஆழமாக வேரூன்றிப் போன சமூகப் பிரச்சினைகளை ஏன் தீர்க்க வேண்டும்? எவ்வாறு தீர்க்க வேண்டும்?” (Conflict Resolution) எனும் தொனிப்பொருளில் மிகவும் சிறப்பான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர். சமூகப் பிரச்சசினைகளை முறையாக ஆய்வுகளுக்கு உட்படுத்தி நீண்ட கால அடிப்படையில் அறிவு ரீதியான அணுகு முறையைக் கையாண்டு எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பாகவும் ஏன்? அவை (Why?) முறையாகத் தீர்க்கப்பட வேண்டும்? என்பது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
ஆக்கபூர்வமான நிலையான சமூக மாற்றங்களுக்குப் பின்னால் சிறந்த திட்டமிடலும், நீண்ட பொறுமையும், அயராத கூட்டு உழைப்பும், அறிவுபூர்வமான அணுகுமுறையும் தேவைப்படுகிறது என்பதை மேற்படி நிகழ்சசியின் மூலமாக உணர்ந்து கொள்ள முடியுமாக இருந்தது.
இந்நிகழ்ச்சியை குறித்த துறையில் மிகவும் அனுபவமும், நிபுணத்துவ அறிவும் கொண்ட இஹ்சான் வாஹித் அவர்கள் நடாத்தி வைத்தார்கள். இவர் ஒரு தொழிலதிபராகவும், (Chairman: iKING International (Pvt) Ltd.), வியாபார மற்றும் தலைமைத்துவ பயிற்றுவிப்பாளராகவும் (Business & Leaderchip coach) காணப்படுகின்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் அப்துல் லதீப் ஸாலிஹ் கல்ஹின்ன அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.