பொது
இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள் 2017 – 2022”
உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், “இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள் 2017 – 2022” என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடலினை இன்று 26 ஆம் திகதி மாலை 04 மணி முதல் 5.30 மணி வரை ஏற்பாடு செய்துள்ளது.
சட்டத்தரணியும் சவூதி அரேபியாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான திரு. ஜாவிட் யூசுப் அவர்களால் கலந்துரையாடல் நெறியாள்கை செய்யப்படும்.
இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்தன, பிரசாந்தி மகிந்தாரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி, ஜூலியஸ் & க்ரீசி மற்றும் அஷ்வினி நடேசன், சட்ட ஆலோசகர்/ ஆராய்ச்சி சக தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சட்டம் ஆகியோர் பேச்சாளர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.