கண்டியில் 24 மணித்தியால நீர் விநியோகம் தடை
கண்டி – கெட்டம்பே நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய அபிவிருத்தி பணிகள் காரணமாக கண்டியின் சில பிரதேசங்களுக்கு நாளை செவ்வாய்க்கிழமை (27) மு.ப 9.00 மணி முதல் நாளை மறுதினம் (28) புதன்கிழமை மு.ப 9.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகத் தடை கண்டி நகரின் சகல வீதிகளும், ஸ்ரீமத் குடா ரத்வத்த மாவத்தை. பகிரவகந்த, தொடம்வெளை, பிரைம்ரோஸ், அணிவித்த, ஜோர்ஜ் இ.டி. சில்வா மாவத்தை, இரண்டாவது இராஜசிங்க மாவத்தை, பேராதெனிய வீதி, ஹேவாஹெட்ட வீதி, லேவெள்ள, தல்வத்த, பூவலிக்கடை, பீரிஸ்வத்த, அம்பிட்டிய ஆகிய பிரதேசங்கள்
அத்துடன் கண்டி வாவி சுற்றுவட்டம், ரஜபிஹில்ல மாவத்தை, நீர்த்தேக்க வீதி, ஹந்தானை, போகம்பர, நாகஸ்தென்ன, தெய்யன்னவெல, ஹீரேஸ்ஸகளை. சுதுகும்பொல, போவெல, தங்கொள்ள, கெட்டம்பே, சரசவி உயன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் 24 மணித்தியாலம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாகவும் கண்டி மாநகர சபை தெறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் அவசியமான நீரை முன்கூட்டியே சேமித்துவைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதேசவாசிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்