யாழ்ப்பாண மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக நலன்புரிச்சங்க தலைவரும் கணக்காளருமான திரு. அ. நிர்மல் தலைமையில் நேற்று (04) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டதோடு, நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இயந்திரமயமான இந்த வாழ்க்கைக்கு இவ்வாறான ஆன்மிக செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும் என்றும், நவராத்திரி பூஜையின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகனினால் வாழ்க்கையின் தத்துவங்கள், பெண்களின் சிறப்பு குறித்து சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பக்திப்பாடல், அம்மன் நடனம், தனிப்பாடல்கள், பட்டிமன்றம், கவிதை மற்றும் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.