crossorigin="anonymous">
வெளிநாடு

சளி, இருமல் மருந்து உட்கொண்ட 66 குழந்தை இறப்பு

4 இருமல் மருந்துகள் உடனடியாக நிறுத்த வேண்டும்

ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த நான்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

நான்கு மருந்துகளை உட்கொண்ட குழந்தைகளுக்கு அதில் இருந்த கலப்படம் காரணமாக சீறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தி பிரிவு காம்பியா நாட்டில் 4 இருமல் மருந்துகள் தரமற்றவை என்று கண்டுபிடித்துள்ளது.

இந்திய ஹரியாணாவில் இருந்து தயாராகும் அந்த நான்கு மருந்துகள் – ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன்(Promethazine Oral Solution) , கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Magrip N Cold Syrup) என்ற பெயரில் விற்கப்படுகின்றன.

ப்ரோமேதசைன் ஓரல் சொல்யூசன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப், மேக்ரிக் என் கோல்டு சிரப் ஆகிய 4 இருமல் மருந்துகளில் அளவுக்கு அதிகமாக டைஎத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இருமல் மருந்துகளை குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே குறிப்பிட்ட 4 இருமல் மருந்துகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் ஹரி யாணா மாநிலத்தை சேர்ந்த மெய் டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் இந்த இருமல் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்துள்ளது. உலகின் எந்த பகுதியிலாவது குறிப்பிட்ட 4 இருமல் மருந்துகள் விநியோகத்தில் இருந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: