வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் “பண்பாட்டுப் பெருவிழா” இன்று (18) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிலையில் இதற்கான அழைப்பிதழ் நேற்று (17) துணுக்காய் பிரதேச செயலக விழாக் குழுவினரால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் யாதெனில் பண்டைய மரபு ரீதியில் பயன்படுத்தப்படும் பனை ஓலைச் சுவடியில் விழா அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டமை சிறப்பான அம்சமாகும்.