crossorigin="anonymous">
பொது

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நாளை (5) பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக

காலி மாவட்டத்தின் அக்மீமன, பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ ஆகிய பகுதிகளுக்கு 02 ஆம் கட்டத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்யுமாயின் , மண்சரிவு, பாறைகள் புறவுதல் , மண்மேடு சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராகுமாறும் பிரதேச மக்களை அறிவுறுத்தியுள்ளது.

காலி மாவட்டத்தில் யக்கலமுல்ல, நாகொட,

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, மில்லனிய, அகலவத்தை,

கேகாலை மாவட்டத்தில், மாவனெல்ல, புலத்கொஹூபிடிய, வரகாபொல, ருவன்வெல்ல, எட்டியந்தோட்டை, தெரணியகலை,

இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, குருவிட்ட, இரத்தினபுரி, நிவித்திகல, ஹெலியகொட, அயகம மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 42 − = 32

Back to top button
error: