காத்தான்குடியில் சுனாமி அனர்த்த விழிப்புனர்வு செயலமர்வு
பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு சுனாமி அனர்த்த விழிப்புனர்வு மற்றும் பாடசாலை மட்டத்தில் அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள் பற்றிய செயலமர்வு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நேற்று (28) வெள்ளிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
உலக சுனாமி விழிப்புனர்வு தினத்தையொட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள் மற்றும் அனர்த்த முன்னாயத்த செயற்பாட்டுக்கு பாடசாலை சமூகத்தை தயார்படுத்தல் எனும் திட்டத்துக்கு அமைவாக இந்த விழிப்புனர்வு செயலமர்வு இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட குறித்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முன்னாயத்த பணிப்பாளர் சுனில் ஜயவீர, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முன்னாயத்த பிரதிப் பணிப்பாளர் சத்துன லியானாராச்சி, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர்மௌலானா கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் உட்பட இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கல்வி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.