பாக். முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் காயம்
இம்ரான் கான் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான், கான் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி ஆயிரக்கணக்காண கட்சி ஆதரவாளர்களுடன் பேரணி மேற்கொண்டு வருகிறார்.
இந்த பேரணி இன்று (03) வஜிராபாத் வந்தபோதே அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்ட்டுள்ளதாக தெரிய வருகிறது
அவருடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.காயம் ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இம்ரான் கானை கொல்ல வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என பி.டி.ஐ கட்சி கண்டித்துள்ளது.