பொது
ஜனாதிபதி அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் 2022 நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகங்கள், மருத்துவமனைகள்,தாதியர் இல்லம் , மருந்தகங்கள் மற்றும் நோயாளர் பிரிவு, பராமரிப்பு பிரிவு, நோயாளிகளின் உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக செய்ய வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.