நிந்தவூர் அல்-அஷ்றக் தங்கம் வென்று வரலாற்று சாதனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற (06) அகில இலங்கை தமிழ் தினப் போட்டி முஸ்லிம் நிகழ்ச்சி- நாடகப் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
பல தடைகளையும் முறியடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், உந்து சக்தியாக மிளிர்ந்த ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், விசேடமாக இந் நிகழ்ச்சியைப் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக ஒழுங்குபடுத்தி இரவு-பகல் பாராது அயராது உழைத்த கல்லூரியின் சிரேஷ்ட ஆசானும் கல்லூரியின் ஒழுக்காற்றுச் சபையின் தவிசாளருமான வை.எம். அஷ்ரப்
மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்கிய ஏ.முஸ்பிர் அஹ்மத், பல வழிகளிலும் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கி கொண்டிருக்கும் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் (SDEC) பழைய மாணவர்கள் சங்கம் (PPA) உறுப்பினர்களுக்கும் பாடசாலை மாணவர்கள், பாடசாலை சமூகம் சார்பாக கல்லூரி அதிபர் ஏ. அப்துல் கபூர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.