ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதால் குரங்கு அம்மை வேகமாக பரவுகிறது – ஆய்வு
40 ஆயிரம் நோயாளர்கள் மத்தியில் 97 வீதமானோர் ஆண்கள்
குரங்கு அம்மை நோய் வேகமாக பரவுவது ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதினாலேயே என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சமூக விசேட வைத்தியர் திந்தன பெரேரா உலகில் குரங்கு அம்மை நோய் ஏற்பட்ட 20 ஆயிரம் பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பெண்களுக்கு அமைவாக ஆண்களுக்கு இந்த குரங்கு அம்மை நோய் ஏற்படக் கூடிய தன்மை பெருமளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
40 ஆயிரம் நோயாளர்கள் மத்தியில் 97 வீதமானோர் ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.
குரங்கு அம்மை நோய் 1970 ஆம் ஆண்டு கொங்கோ நாட்டில் மனிதர்கள் மத்தியில் பரவியது இதன் பின்னர் தென்னாப்பிரிக்க நாடுகளில் அடிக்கடி பரவியது என்று சமூக மருத்துவ நிபுணர் கூறினார்.
குரங்கு அம்மை நோய் உலகில் 109 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது 78 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்