தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் நற்சான்றிதழ் கையளிப்பு
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கைக்கான மெக்சிக்கோ தூதுவர் Federico Salas Lotfe, இலங்கைக்கான பூட்டான் தூதுவர் Rinchen Kuentsyl, இலங்கைக்கான பரகுவே தூதுவர் Flemming Raul Duarte, இலங்கைக்கான லக்சம்பர்க் தூதுவர் Peggy Frantzen, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan,
இலங்கைக்கான ஓமான் தூதுவர் Ahmed Ali Saeed Al Rashdi, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean- Francois Pactet மற்றும் இலங்கைக்கான கானாவின் உயர்ஸ்தானிகர் Kwaku Asomah Cheremeh ஆகியோரே இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது நற்சான்றிதழ்களைக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.
(Newly appointed Ambassadors and a High Commissioner to Sri Lanka presented their credentials to Sri Lankan President Ranil Wickremesinghe at the Presidential Secretariat today (11) morning
Accordingly, His Excellency Mr. Federico Salas Lotfe, the Mexican Ambassador to Sri Lanka, His Excellency Mr. Rinchen Kuentsyl, the Bhutan Ambassador to Sri Lanka, His Excellency Mr. Fleming Raul Duarte, the Paraguay Ambassador to Sri Lanka, Her Excellency Peggy Frantzen, the Luxembourg Ambassador to Sri Lanka, His Excellency Mr. Levan Dzhagaryan, the Russian Ambassador to Sri Lanka, His Excellency Mr. Ahmed Ali Saeed Al Rashdi,
the Oman Ambassador to Sri Lank, His Excellency Mr. Jean- Francois Pactet, the French Ambassador to Sri Lanka and His Excellency Mr. Kwaku Asomah Cheremeh the High Commissioner of Ghana to Sri Lanka who assumed duties recently met the President today.)