crossorigin="anonymous">
பொது

மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு

பாடசாலை மாணவர்களுக்கு வழமையை விட அதிக உணவு கிடைக்காத நிலை காணப்படுவதால் 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

தற்போது ஒரு பிரிவினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றத. அதற்காக ஒரு நிதியத்தை நிறுவி அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பூராகவும் உள்ள பாடசாலை மாணவர்கள் உணவுப் பிரச்சினையை எதிர்கொள்வதால் அவர்களுக்கு மதிய உணவை தாமதமின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் செலவீனத்தை அதிகரித்துள்ளதால், மக்களுக்கு சலுகையாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் பாரிய அளவு உயர்ந்துள்ளதனால், அவற்றை சிரமமின்றி பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல (11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − = 58

Back to top button
error: