crossorigin="anonymous">
பொது

அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் விண்ணப்பம் கோரல்

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பரிசீலிப்பதற்காக பகிரங்க வாழ்வில் அல்லது உயர் தொழிலில் தமக்கென்று சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கீர்த்தி வாய்ந்தவர்களும் நேர்மையுடையவர்களும் அத்துடன் ஏதேனும் அரசியற் கட்சியின் உறுப்பினரல்லாதவர்களுமான ஆட்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் www.parliament.lk என்னும் பாராளுமன்ற இணையத் தளத்தில் காணப்படும் மாதிரிப்படிவத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சுயவிபரப் படிவத்துடன், 2022 நவம்பர் 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பாராளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிட்டு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 97 − 90 =

Back to top button
error: