2023 வரவு செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலில்லை – சஜித்
ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித பதிலும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (14) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மக்கள் நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதற்கான திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. அந்த வகையில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இதில் எவ்வித பதிலும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்து உரையாற்றினார்