வெளிநாடு
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
டொனால்ட் ட்ரம்ப் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என் அறிவித்துள்ளார் .
அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் ஜனாதிபதியாக முடியும். முதல் முறை ஜனாதிபதியாக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார்.
அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
ஃப்ளோரிடாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், “2024 ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. ஜனநாயக கட்சியினரை வீழ்த்துவேன். என தெரிவித்துள்ளார்