இலங்கையிலிருந்து சுற்றுலா விசா மூலம் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் சிலர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அமைச்சர், இலங்கைக்குள் மற்றும் விமான நிலையங்களில் இதனுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இரண்டும் இணைந்து குழுவொன்றை நியமித்திருப்பாதாக அமைச்சர் கூறினார்.
இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். சட்டத்திலிருந்து இவர்கள் தப்பிவிட முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆட்கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது 2 விடயங்களாகும். சிலர் சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடு செல்கின்றனர். இவர்கள் டுபாய், ஓமான் போன்ற நாடுகளில் தரகர்களினால் விற்பனை செய்யப்படுகின்றனர்.
இந்த சம்பவம் மக்கள் அறியாத வகையில் இடம்பெறுகின்றன. தற்பொழுது வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக அலுவலகங்கள் பதில் கூறுவதற்கோ அல்லது ஒருவர் இல்லை என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துகொட முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இதற்காக ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.