‘குரு அபிமானி’ என்ற வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
முன்பள்ளிக் கல்வித் திட்டத்திற்கான தேசிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படவுள்ளது. இது விடயம் தொடர்பான ஆரம்ப கட்ட திட்ட அறிக்கை ஒன்றும் இதன்போது இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவினால் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது
இது தொடர்பாக விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர்
“முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்குதல், சிறுபராய கல்வி தொடர்பான சட்ட மூலத்தை பிரதமரிடம் கையளித்தல், 150 முன்பள்ளிப் பாடசாலைகளை அமைப்பதற்காக தலா 25 இலட்சம் ரூபாவை வழங்குதல், ஆயிரத்து 500 முன்பள்ளிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி உதவிகளை வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் அங்கு இடம்பெறும் என்றும்” கூறினார்.