கல்வித்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
கல்வித்துறையில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கு, பரீட்சைகளை நடாத்தி உடனடியாக பெறுபேறுகளை வழங்குவதற்கும், இதுவரை நடத்தப்பட்ட பரீட்சைகளின் ,பெறுபேறுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வியாளர் சேவை, அதிபர் சேவை ஆகிய ஐந்து சேவைகளைச் சார்தவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.. இதற்கமைவாக அமைச்சின் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய அனைவரும் பாடுபடுவோம்.
கடந்த கொவிட் காலப்பகுதியில், மாணவர்கள் கல்வியை கற்பதற்கான இழந்த காலம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டார்