crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தோனேசிய ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா – ஜாவா தீவில் (22) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை ஜாவா தீவுகள் ஆளுநர் ரித்வான் காமில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் நவம்பர் 22) காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. (6.21 மைல்) ஆழத்தில் இதன் மையப்பகுதி காணப்பட்டது. 5.6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர்.

இப்பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நிலநடுக்கத்துக்கு இதுவரை 162 பேர் இறந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2004ல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 14 நாடுகளில் சுனாமியை ஏற்படுத்தியது. இதில் 226,000 மக்கள் உயிரிழந்தனர். இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களாவர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 83 = 93

Back to top button
error: