crossorigin="anonymous">
பொது

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு நியூசிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபெல்ட்டன் (Michael Appleton)

இலங்கைக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு நியூசிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் காலநிலை, பால் பொருட்கள் உள்ளிட்ட கால்நடைகள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நியூசிலாந்து நீண்டகால ஆதரவை இலங்கைக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபெல்ட்டன் (Michael Appleton) தெரிவித்தார்

சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முகமாக பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்கால தொழிநுட்ப உலகிற்கு ஆராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்த இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நியூசிலாந்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

1950 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகள் இருப்பதாக நியூசிலாந்தின் தூதுவர் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியின் அளவை அதிகரிக்க ஆராய்ச்சி அலுவலகம் நிறுவப்படும் என்று தொடக்க விழாவில் பங்கேற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உப வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், சர்வதேச ஆய்வு அலுவலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சி.என்.ஆர்.ஏ.அலஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 12 = 21

Back to top button
error: