crossorigin="anonymous">
வெளிநாடு

‘வால்மார்ட்’ அங்காடியில் வாடிக்கையாளர் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்கா – விர்ஜினியா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அங்காடியில் கடந்த செவ்வாய்க் கிழமை (22) இரவு 10 மணியளவில் நபர் ஒருவரால் வாடிக்கையாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர்

இது குறித்து பொலிஸ் அதிகாரி லியோ கோசின்ஸ்கி கூறும்போது, ‘‘துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அங்காடியில் இறந்து கிடந்தார்.

அவர் ஒருவர்தான் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருப்பார் என்று நம்புகிறோம்’’ என்றார்.

ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார், அவர் எப்படி உயிரிழந்தார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

வழக்கமாக வால்மார்ட்அங்காடி இரவு 11 மணிக்கு மூடப்படும். அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 10 பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்கா கொலராடோவில், தன்பாலின சேர்க்கையாளர்கள் கிளப் ஒன்றில் துப் பாக்கிச் சூடு நடந்தது. அதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 3 நாட்களில் நடைபெற்ற 2-வது துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அமெரிக்க மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 − 66 =

Back to top button
error: