2023 பாடசாலை விடுமுறை நாட்களை குறைக்க நடவடிக்கை
பாடத்திட்டங்களை 2023 வருடத்திலேயே பூர்த்தி செய்ய நடவடிக்கை
2023 யில் விடுமுறை நாட்களைக் குறைத்து பாடசாலை நாட்களை அதிகரிப்பதன் மூலம் அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை 2023 வருடத்திலேயே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (25) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்
2023 வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை உபகரணங்களுக்கான செஸ்வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான யோசனை எதிர்வரும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
அவ்வாறு செய்தால் உயர்தரப் பரீட்சை, மற்றும் சாதாரண தரப் பரீட்சையையும் உரிய காலத்தில் நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்