அல் ஹிக்மா கல்லூரி மாணவர்களுக்கு சத்துணவு வேலைத்திட்டம்
கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு
கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் தேவையுடையவர்கள் என பாடசாலை முகாமைத்துவத்தினால் அடையாளங் காணப்பட்ட மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அல் ஹிக்மா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 2022.11.21ஆம் திகதி உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதாக .அல் ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்
அடையாளங் காணப்பட்ட மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் முதற்கட்டமாக 50 மாணவர்களுக்காக உணவு வழங்கி வைக்கப்பட்டது. பாற்சோறு, சோறு, கடலை, பாசிப்பயறு, கௌபி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றமை விஷேட அம்சமாகும்
இதற்கான ஆவணங்கள் பாடசாலை முகாமைத்துவத்திடம் உத்தியோபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான மஹ்சூர் முஸ்தபா அவர்களிடம் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் உத்தியோகபூர்வமாக ஆவணங்களை கையளித்தார்.
மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் பிரகாரம் முதற்கட்டமாக ஆறு மாதங்களுக்கு, வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் என்ற அடிப்படையில் மாதத்தில் சுமார் 16 நாட்கள் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.கையளிக்கும் நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் எம் எம் ஹுசைன் நிலையிலான முகாமைத்துவ பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் அல்ஹாஜ் எம் எஸ் எம் புஹாத், திட்ட பொறுப்பாளர் எம் எஸ் எம் ஹஸன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முயீத் மற்றும் உறுப்பினர்கள், நலன்விரும்பிகளில் ஒருவரான எம் நிஸ்வான் ஆசிரியர், பழைய மாணவர் சங்கத்தின் உப பொருளாளர் அல்ஹாஜ் மிஸ்ருல் ஆப்தீன், நிறைவேற்று குழு உறுப்பினர்களான மிப்ரா சலீம், எம் எப் எம் முனாஜி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்திற்காக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அல் ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் குறிப்பிட்டார்
இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் பழைய மாணவ, மாணவிகள், நலன்விரும்பிகள் மேற்படி திட்ட பொறுப்பாளர் எம் எஸ் எம் ஹஸன் (0777310732), பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் (0773112561) ஆகியோரை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.