crossorigin="anonymous">
அறிவியல்

அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் மீண்டும் கண்டுபிடிப்பு

அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனமொன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றது

140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனமே பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலின் மையப் பகுதியில் ஓரஞ்சு நிறம் கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon) ஒன்றினை 1882-ஆம் ஆண்டுக்குப் பிறகு காடுகளில் காண முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த இனத்தின் பறவை ஒன்று 140 ஆண்டுகளுக்குப் பிறகு பப்புவா கினியா தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொலைந்த பறவைகளைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு ‘லாஸ்ட் பேர்ட்ஸ்’ என்ற அமைப்பு,  உதவி வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 4

Back to top button
error: