2021 க.பொ.சா/தர பரீட்சார்த்திகளில் 2,31,982 பேர் உயர் தரத்திற்கு தகுதி
6 ஆயிரத்து 566 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 3,11,553 பரீட்சார்த்திகளில் 2,31,982 பேர் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பாடசாலை பரீட்சார்த்திகளாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 321 பேர் முதற்தடவையில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள்.
இவர்களில் 74 தசம் 5-2 வீதமானோர் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றிருக்கின்றார்கள். 10 ஆயிரத்து 863 பேர் சகல பாடங்களிலும் ஏ-சித்திகளைப் பெற்றிருக்கின்றார்கள். அத்துடன் 6 ஆயிரத்து 566 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை.
இதேவேளை, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 498 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.
கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்று பிரதியினை நாளை திங்கட்கிழமை முதல் (28) விநியோகிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி.தர்மசேன தெரிவித்திருக்கின்றார்.
கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்று பிரதியினை இணையத் தளத்தின் ஊடாக வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன மேலும் தெரிவித்தார்.