நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு அபாய நிலை மீண்டும் ஏற்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இதன் பணிப்பாளர் வைத்தியர் அனுர ஜயசேகர தெரிவித்தார்.
150 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் எதிர்வரும் காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அனர்த நிலை உண்டு என்று தெரிவித்த வைத்தியர் அனுர ஜயசேகர ஜூன், ஜூலை மாதங்களுக்கு பின்னர் பருவகால மழைக்குப்பின்னர் இதன் பாதிப்பு அதிகம் காணப்படும் என்றும் தெரிவித்தார்
குறிப்பாக மேல், சப்ரகமுவ, தெற்கு முதலான மாகாணங்களில் இக்காலப்பகுதியில் இதன் தாக்கம் அதிகம் காணப்படும் என்றும் வைத்தியர் அனுர ஜயசேகர மேலும் கூறினார்.