அறிவியல்
48,500 ஆண்டு பழமையான ஜோம்பி (zombie virus) வைரஸ் கண்டுபிடிப்பு

ஐரோப்பாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி (zombie virus) வைரஸ்களை கண்டறிந்துள்ளனர்.
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி இடத்தில் உள்ள ஏரியில் பழமை வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக், அண்டார்டிக்கா பனிப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் நாளும் உருகி வருகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஆண்டுகளாக புதைத்திருக்கும் ஆபத்தான வைரஸ்கள் வெளியேறும் அபாயம் உள்ளது.
பல ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்களை விஞ்ஞானிகள் ஜோம்பி வைரஸ்கள் என்று அழைகின்றனர்.
புவி வெப்பமடைதல் காரணமாக நிரந்தர உறைபனி உருகுதல் தீவிரமாகும்போது இம்மாதிரியான வைரஸ்களால் ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.