ஐரோப்பா பாராளுமன்ற பிரதிநிதிகள் – ம.வி.மு. இடையில் சந்திப்பு
ஸ்பானியாவின் என்டிகெப்பிட்டலிஸ்டாஸ் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஐரோப்பா பாராளுமன்ற உறுப்பினர் மிகுவெல் அர்பன் க்ரெஸ்பொ உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (02) ம.வி.மு.வின் தலைமையகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட கட்சியின் தலைவர்களை சந்தித்தனர்.
இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பாக அவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுக்கான தகவல்களை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டே அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
கிரேக்க கடன் நெருக்கடி தொடர்பாக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற ஆய்வின் பின்னர் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடி குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்து தொடர்பாக இவர்களுக்கும் ம.வி.மு. பிரதிநிதிகளுக்கும் இடையில் நீண்ட உரையாடல் இடம்பெற்றது.
இச்சந்தர்ப்பத்தில் ம.வி.மு. தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க மற்றும் மத்தியக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இணைந்திருந்தனர்.
என்டிகெப்பிட்டலிஸ்டாஸ் கட்சியின் இரு பிரதிநிதிகளும் ஐரோப்பா பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதுடன், ஸ்பானிய உள்ளூராட்சி மன்றங்களில் 21% பிரதிநிதித்துவத்தையும் கொண்டுள்ளனர்.