crossorigin="anonymous">
பொது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 72 ஆவது ஊடக செயலமர்வு

பாணந்துறை அல் - பஹ்ரியா தேசிய கல்லூரியில்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 72 ஆவது ஊடகக் கருத்தரங்கு நாளை (07) சனிக்கிழமை காலை 9 மணி முதல் முழு நாள் கருத்தரங்காக பாணந்துறை அல் – பஹ்ரியா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில், பாணந்துறையிலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், கலைவாதி கலீல், சாமிலா செரீப்,

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர் என போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்தார்.

பாணந்துறை அல் – பஹ்ரியா தேசிய பாடசாலையின் 97 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தின் ஊடகச் செயலாளர் கல்சூம் ஜிலானி பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதோடு,

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவருமான என்.எம். அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − 8 =

Back to top button
error: