
மன்னார்- மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா எதிர்வரும் 23ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவில் 30 பேர் மாத்திரம் பங்குபற்றலாம் என்பதுடன் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள முடியாது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் நடைபெற்றது இதன் போது ஆடித் திருவிழா தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை அடிகளார், மடுத்திருத்தலத்தின் பரி பாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் மற்றும் உதவி அரசாங்க அதிபர் , திணைக்கள தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் , சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.