’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலையில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பயிற்சித் தொடர்
’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற பயிற்சி தொடரின் 72 ஆவது ஊடகக் கருத்தரங்கு (03) சனிக்கிழமை காலை 9 மணி முதல் முழு நாள் கருத்தரங்காக பாணந்துறை அல் – பஹ்ரியா தேசிய பாடசாலையில் நடைபெறறது.
ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் தலைவி சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பாணந்துறையிலுள்ள தமிழ் மொழி மூலம் கற்கைகளை மேற்கொள்ளும் ஏழு பாடசாலை களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
காலை, மாலை இரு அமர்வுகளாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ், செயற்குழு உறுப்பினர் தாஹா முஸம்மில், உப செயலாளர்களில் ஒருவரான ஜாவிட் முனவ்வர் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினர் அஷ்ரப் ஏ சமத் ஆகியோர் விரிவுரைகளை நடத்தினர்.
இக்கருத்தரங்கின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகச் செயலாளரும் கொன்சிளருமான கல்சூம் ஜிலானி பிரதம அதிதியாகவும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் ஏற்பாட்டாளருமான அல்ஹாஜ் என்.எம். அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
அல் பஹ்ரிய்யா தேசிய கல்லூரியின் 97ஆம் ஆண்டு சாதாரண தர மாணவ, மாணவிகளின் ஏற்பாட்டில் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ் ஏ. எல் எம் அஸ்வர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இக்கருத்தரங்கின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமை உரையையும், ஏற்பாட்டாளர் என் எம் அமீன் அறிமுக உரையையும், போரத்தின் உப செயலாளர் ஸாதிக் ஷிஹான் நன்றியுரை யையும் நிகழ்த்தினார்கள். ஏற்பாட்டுக் குழு சார்பில் கலாபூஷணம் மஸீதா அன்சார் விஷேட நன்றி உரை நிகழ்த்தினார்.
அன்றைய தினம் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் தலைவி சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கவிஞர்களுடன் இணைந்து சிநேகபூர்வ கலந்துரையாடலுடனான ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் பல விடயங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சத்தார் தெரிவித்தார்.(ரசி)