crossorigin="anonymous">
பிராந்தியம்

கண்டி ஊடகவியலாளர் எஸ்.ஏ.சி.எம். குவால்தின் காலமானார்

கண்டி இலக்கம். 121, பிரதான வீதி, தென்னெகுப்புரை எனும் முகவரியை சேர்ந்த ஊடகவியலாளர் எஸ் .ஏ.சி.எம். குவால்தின் இன்று (08) காலை தனது 73 ஆவது வயதில் காலமானார்

இவர் சித்தி சிபாயா அவர்களின் அன்புக் கணவரும், கெ.ஏ.ரசூல், கெ.ஏ. ரிபாத் ஆகியோர்களின் அன்புத் தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று பி.ப 6.00 மணியளவில் தென்னெகுப்புரை முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்படும்

1949 ஆண்டு பிறந்த காலம்சென்ற ஊடகவியலாளர் சேகு அப்துல் காதர் மமாஹமட் குவால்தீன் அவர்கள்………………….

கண்டி, ககங்கல்லயில் பிரபல வர்த்தகராக திகழ்ந்த மர்ஹும் சேகு அப்துல் காதர்
மற்றும் காதர் பீபி தம்பதிகளின் புதல்வரான எஸ் .ஏ.சீ.எம். குவால்தீன், தென்னெகுப்புரை கிராமத்தின் முக்கியஸ் தர்களில் ஒருவரான மொஹம்மட்சாலியின் மூன்றாவது புதல்வியான சித்தி சிபாயாவுடன் இல்லற வாழ்க்கககய 1975 இல் ஆரம்பித்தார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை கல்வி கற்ற அவர், 1966 ஆம் ஆண்டு தினபதி பத்திரிகை ஊடாக ஊடகப் பயணத்கத ஆரம்பித்தார். சிறுககதகள், கட்டுகரகள் போன்ற ஆக்கங்ககள எழுதிவந்த நிலையில், 1970 ஆம் ஆண்டளவில் “ஈழமணி” பத்திரிகை, கண் டி மாநகரில் இருந்து வெளிவந்த “செய்தி” நாளிதழ் வீரசகேரி பத்திரிகைகளின் கண் டி – செங்கடகல செய்தியாளராகவும் பணியாற்றினார்

2017 இல் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கக பத்திரிகை ஆசிரியர்
சங்கம் இணைந்து நடத்தும் ஊடகத்துரைக்கான அதியுயர் விருது வழங்கல்
விழாவில் ஊடகத்துரையில் 51 வருட கால சேவையை பாராட்டி வாழ்நாள்
சாதனைக்கான தங்கப் பதக்கம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண் டு இரத்தினதீபம் விருது, 2005 இல் மத்திய மாகாண தமிழ்க்கல்வி, இந்து கலாச்சார அமைச்சின் ஊடகத்துரைக்கான சாஹித்திய விருது, “மாதியசூரி” விருது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான இவர் 2010 இல் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அரசினால் “கலாபூஷணம்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 1 =

Back to top button
error: