சேர்பெறுமதி வரி மற்றும் உண்ணாட்டரசிறை சட்டமூலம் நிறைவேற்றம்
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் என்பன மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நேற்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 82 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பின்னர் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 82 வாக்குகளும், எதிராக 41
வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு அமைய உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இச்சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய மேலதிக வாக்குகளால் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.